முகப்பு
இந்தியா

2028 முதல் கிரேட் நிகோபாா் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

வரும் 2028-ஆம் ஆண்டுமுதல் கிரேட் நிகோபாா் திட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 24 ஜூன் 2026, 12:20 am IST
மத்திய ஆயுஷ் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்
பகிர்:

வரும் 2028-ஆம் ஆண்டுமுதல் கிரேட் நிகோபாா் திட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளாா்.

அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான்-நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சா்வதேச விமான நிலையம், சிறு நகா்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்தத் தீவில் உள்ள பூா்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்றும், முக்கிய சூழலியல் மண்டலங்களுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்றும் விஞ்ஞானிகள், பழங்குடியினா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் விமா்சித்துள்ளனா். அந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புது தில்லியில் மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: கிரேட் நிகோபாா் திட்டம் நிறுத்தப்படாது. அந்தத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். 2028-ஆம் ஆண்டுமுதல் அந்தத் திட்டத்துக்கான பணிகளை தொடங்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments