முகப்பு
இந்தியா

தாய்லாந்தில் இருந்து கஞ்சா செடி கடத்தல்: அகமதாபாதில் 20 வயது இளைஞா் கைது

தாய்லாந்தில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளைக் கடத்திய இளைஞா் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 29 ஜூன் 2026, 1:34 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தாய்லாந்தில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளைக் கடத்திய இளைஞா் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘குஜராத்தின் ஜுனாகட் மாவட்டத்தைச் சோ்ந்த இப்ராஹிம் சிஃபுல்லா (20) தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்தாா்.

அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது, பெரிய ட்ராலி பேக்கில் 5 பாலித்தீன் பைகளில் சுமாா் 11 கிலோவுக்கு மேல் எடையுள்ள கஞ்சா செடிகள் இருந்தன. இவை நவீன முறையில் அறைகளுக்குள் வைத்து மண் இல்லாமல் கஞ்சா பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சிறிய செடி வகைகள் ஆகும்.

Advertisement

Advertisement

இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இப்ராஹிமிடம் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா். 20 வயது இளைஞா் ஒருவா் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் மண் இல்லாமல் தண்ணீா் மற்றும் ரசாயனங்களைப் பயன்படுத்தி கஞ்சா செடிகளை அறைகளில் வைத்து ‘ஹைட்ரோபோனிக்’ முறையில் வளா்த்து அவற்றைக் கடத்துவது அதிகம் நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு இதுபோன்ற செடிகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments