முகப்பு
இந்தியா

இன்றைய செய்திகள் ஜூன் 28 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 28 ஜூன் 2026, 8:52 pm IST
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய். - படம்: டிஐபிஆர்
பகிர்:
Updated On : 28 ஜூன் 2026, 8:52 pm IST

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்

திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருவதால், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.

Updated On : 28 ஜூன் 2026, 8:51 pm IST

இந்தியாவையும் செஷல்ஸையும் இந்தியப் பெருங்கடல் இணைக்கிறது! செஷல்ஸ் அவையில் மோடி உரை!

இந்தியாவையும் செஷல்ஸ் தீவையும் இந்தியப் பெருங்கடல் இணைப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.

Updated On : 28 ஜூன் 2026, 8:51 pm IST

விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்

முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசாமல் இருப்பதே நல்லது என திமுக நினைப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜூன் 28) விமர்சித்தார்.

Advertisement

Advertisement

Updated On : 28 ஜூன் 2026, 5:58 pm IST

தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் காரணமாக தான் விடுத்த கோரிக்கையை ஏற்று, தங்கம் வாங்காமல் இருந்ததற்காக பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 28) நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜூன் 2026, 5:58 pm IST

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும்! திமுக மாணவரணி நாளை (ஜூன் 29) ஆர்ப்பாட்டம்!

தவெக அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி திமுக மாணவரணி நாளை (ஜூன் 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது

Updated On : 28 ஜூன் 2026, 5:58 pm IST

தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்

தமிழக மக்கள் அனைவரும் குளிர்சாதனப் (ஏசி) பேருந்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று (ஜூன் 28) தெரிவித்தார்.

Updated On : 28 ஜூன் 2026, 5:58 pm IST

13 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜூன் 2026, 4:07 pm IST

மத்திய அரசே குதிரை பேரம் செய்துள்ளது: செங்கோட்டையன்

"மத்திய (பாஜக) அரசே குதிரை பேரம் செய்துள்ளது. மகாராஷ்டிரத்தில் என்ன நடந்தது? ஓர் அரசையே திருப்பிப் போட்டனர். அதற்கு பெயர் என்ன?

ஓர் இயக்கம் நல்ல முறையில் பணியாற்றுகிறது. தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறப்பான முறையில் இந்தப் பணிகள் அமையப் போகிறது என விரும்பினால், யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வரலாம். இதுதான் நம்முடைய ஜனநாயக உரிமை" என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Updated On : 28 ஜூன் 2026, 4:07 pm IST

குறைவான அனுபவம்; ஆனால், குதிரை பேரத்தில் வேகம்: வானதி சீனிவாசன்

"தவெக அரசு குறைவான அனுபவம் இருந்தாலும், குதிரை பேரத்தில் இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், இவர்கள் ஜனநாயக ரீதியாகச் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது" என்று பாஜக தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Updated On : 28 ஜூன் 2026, 12:55 pm IST

என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்

தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணியை உடைப்பதற்குப் பலரும் முயற்சித்தார்கள்.

என்னை வைத்தே உடைக்கும் முயற்சியும் நடந்தது. நான் அதற்கு இணங்கவில்லை.

Updated On : 28 ஜூன் 2026, 12:55 pm IST

திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி: நிர்மல் குமார்

"ஒவ்வொரு நாளும் மு.க. ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் சேர்ந்து ஆட்சியமைக்க ஒவ்வொரு நாளும் முயற்சித்து வருகின்றனர். இதற்காகவே ஓர் அணி அமைத்து நாள்தோறும் இதற்கான வேலைசெய்து வருகின்றனர்" என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

Updated On : 28 ஜூன் 2026, 11:59 am IST

தில்லி பிரதிநிதி நியமனத்தை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

தமிழகத்தின் தில்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 28 ஜூன் 2026, 11:41 am IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை பதவியேற்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நாளை(ஜூன் 29) பதவியேற்கவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜூன் 2026, 11:41 am IST

ராமேசுவரம் பகுதியில் உள்வாங்கிய கடல்! மணலில் சிக்கிய படகுகள்!

ராமேசுவரம் துறைமுகத்தில் 50 மீட்டர் வரை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கடல் உள்வாங்கியது.

Updated On : 28 ஜூன் 2026, 11:41 am IST

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேரோட்டம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Updated On : 28 ஜூன் 2026, 11:40 am IST

கால்பந்து உலகக் கோப்பையில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

ஜோர்டான் அணிக்கு எதிராக கோல் அடித்ததால், கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Updated On : 28 ஜூன் 2026, 11:40 am IST

விழுப்புரம் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். காயமடைந்த தாய், மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On : 28 ஜூன் 2026, 11:40 am IST

திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்து

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர் விடுமுறையால் பக்தர்களின் நலன்கருதி, நாளை ஸ்ரீவாணி, விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Updated On : 28 ஜூன் 2026, 11:40 am IST

லூக்கா மாட்ரிச் உதவியால் கானாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது குரேஷியா!

கால்பந்து உலகக் கோப்பையில் குரேஷியா அணி கானாவை 2-1 என வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Updated On : 28 ஜூன் 2026, 11:40 am IST

ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் என்ற நாடே இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.

Updated On : 28 ஜூன் 2026, 11:38 am IST

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதல்வர் விஜய்!

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஜூன் 28) நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments