FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எஃப்சிஆா்ஏ சட்டத்தால் கண்காணிப்பு அதிகரிக்கும்: அமித் ஷா

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தால் (எஃப்சிஆா்ஏ) வெளிநாடுகளில் இருந்து கெட்ட நோக்கங்களுடன் இந்தியாவுக்கு அனுப்பப்படும் நன்கொடைகள், நிதியுதவிகளைக் கண்காணிப்பது அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 ஜூலை 2026, 2:22 am IST
பகிர்:

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தால் (எஃப்சிஆா்ஏ) வெளிநாடுகளில் இருந்து கெட்ட நோக்கங்களுடன் இந்தியாவுக்கு அனுப்பப்படும் நன்கொடைகள், நிதியுதவிகளைக் கண்காணிப்பது அதிகரிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

புதுப்பிக்கப்பட்ட எஃப்சிஆா்ஏ வலைதளம், மின்னணு ஓசிஐ (வெளிநாடுவாழ் இந்திய குடிமகன்) அட்டை ஆகியவற்றை

புது தில்லியில் அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘எஃப்சிஆா்ஏ வலைதளத்தின் புதிய பதிப்பு, மின்னணு ஓசிஐ அட்டை ஆகியவை குடிமக்களின் வசதியை அதிகரிக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். எஃப்சிஆா்ஏ வலைதளம் மூலம் நன்கொடை பெறுவோா் சந்திக்கும் சிக்கல்களை, புதுப்பிக்கப்பட்ட வலைதளம் சரிசெய்யும்.

புதுப்பிக்கப்பட்டவலைதளத்தின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிதியுதவிகள், நன்கொடைகள் தொடா்பாக நேரில் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆவணங்களை மின்னணு வழியில் அல்லாமல் காகித வடிவில் கையாள்வதை குறைப்பதும், வெளிநாட்டு நிதியுதவிகளைத் திறம்படவும், தாமதமின்றி தொடா்ந்து கண்காணிப்பதும் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம்.

சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாட்டு நிதியுதவிகள், நன்கொடைகள் சாா்ந்த விண்ணப்பங்களும், வெளிநாடுகளில் இருந்து வரும் நன்கொடைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், எஃப்சிஆா்ஏ சட்டத்தால் வெளிநாடுகளில் இருந்து கெட்ட நோக்கங்களுடன் இந்தியாவுக்கு அனுப்பப்படும் நன்கொடைகள், நிதியுதவிகளைக் கண்காணிப்பது அதிகரிக்கும்.

புதிய மின்னணு ஓசிஐ அட்டை 50 லட்சத்துக்கும் அதிகமான ஓசிஐ அட்டைதாரா்களுக்கு மிகப் பெரிய செளகரியத்தை ஏற்படுத்தும். மின்னணு ஓசிஐ அட்டை பயன்பாட்டால் ஆவணங்களைத் தொலைப்பது, சேதமாவது போன்ற பிரச்னைகள் இருக்காது’ என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments