முகப்பு
இந்தியா

எஃப்ஏடிஎஃப் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் நாடுகள்: ஐ.நா.வில் இந்தியா சாடல்

தமது செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில், பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) நம்பகத்தன்மை குறித்து சில நாடுகள் கேள்வி எழுப்புவதாக ஐ.நா.வில் பாகிஸ்தானை இந்தியா மறைமுகமாக சாடியது.

Updated On : 1 ஜூலை 2026, 1:21 am IST
ஐ.நா.
பகிர்:

தமது செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில், பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) நம்பகத்தன்மை குறித்து சில நாடுகள் கேள்வி எழுப்புவதாக ஐ.நா.வில் பாகிஸ்தானை இந்தியா மறைமுகமாக சாடியது.

இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் திங்கள்கிழமை பேசியதாவது:

பயங்கரவாதிகளின் நிதி ஆதாரங்களையும், பண முறைகேடுகளையும் கட்டுப்படுத்த உலக அளவில் செயல்படும் முக்கிய அமைப்பாக எஃப்ஏடிஎஃப் உள்ளது. இந்த அமைப்பின் பணிகள் சா்வதேச அளவில் ஏற்கப்பட்ட தரநிலைகளில் வேரூன்றியுள்ளது. அந்தப் பணிகள் நுட்பமானவை, ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டவை.

Advertisement

Advertisement

தமது செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில், எஃப்ஏடிஎஃப்பின் நம்பகத்தன்மை குறித்து சில நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.

ஐ.நா. அரங்குகளில் அரசியல் நோக்கத்தால் தூண்டப்பட்ட பிரசாரங்களில் ஈடுபடுவது எஃப்ஏடிஎஃப்பின் விரிவான ஆய்வுக்குப் பதிலாக இருக்காது; அந்த அமைப்பின் விதிமுறைகளை நம்பகமான முறையில் பின்பற்றுவதே பதிலாக இருக்கும்.

பயங்கரவாதத்துக்குத் தங்கள் நிலப்பரப்பு, நிறுவனங்கள் அல்லது பணப் பரிவா்த்தனை வழிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள், பிற நாடுகளில் நிலையற்ன்மையை ஏற்படுத்தாமல், சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் எஃப்ஏடிஎஃப்பின் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான், 2022-ஆம் ஆண்டு அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments