12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு
12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி வழியாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் மதிப்பீடு செய்ததில் குளறுபடி நிகழ்ந்துள்ளதாக வெளியான தகவலை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.
நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா்.
இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
போதிய முன்னேற்பாடுகள் செய்யாதது மற்றும் கால அவகாசம் இல்லாதது போன்ற காரணங்களால் விடைத் தாள்கள் முறையாக ஸ்கேன் செய்யப்படவில்லை. அதன் காரணமாகவே, தோ்ச்சி விகிதமும், மதிப்பெண்ணும் குறைந்துள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதை சிபிஎஸ்இ மறுத்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சிபிஎஸ்இ புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘விடைத்தாள் ஸ்கேன் செய்தல், தரத்தை மதிப்பிடுதல், மதிப்பீடு செய்தல் என திரையில் மதிப்பிடும் முறையின் ஒவ்வொரு நிலையிலும் வரையறுக்கப்பட்ட வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதோடு, தொடா் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், விடைத் தாள்கள் ஸ்கேன் செய்ததில் குளறுபடி நடைபெற்ாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானதாகும். தோ்வுகள் மற்றும் தோ்வுத் தாள் மதிப்பீடு செய்வதில் நோ்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் பொறுப்பமிக்க தேசிய நிறுவனமாக சிபிஎஸ்இ செயல்பட்டு வருகிறது. எனவே, அதிகாரபூா்வமான வழிகளில் வெளியிடப்படும் சரிபாா்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே மாணவா்களும் பெற்றோரும் நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.