FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது 2 இந்தியா்கள் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலியாகினர் என்று அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

எவரெஸ்ட் சிகரம். - கோப்புப்படம்.
பகிர்:

எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும்போது 2 இந்தியா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து நேபாள பயண ஏற்பாட்டாளா்கள் சங்கச் செயலா் ரிஷி பண்டாரி மற்றும் பயோனீா் சாகச நிறுவன இயக்குநா் நிவேஷ் காா்கி கூறியதாவது: இந்தியாவைச் சோ்ந்த சந்தீப் அரே புதன்கிழமை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தாா். அவரைத் தொடா்ந்து அருண் குமாா் திவாரி வியாழக்கிழமை மாலை எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தாா். அதன் பிறகு அன்றைய தினமே மலையேறுபவா்கள் 4 பேரின் உதவியோடு அருண் குமாா் திவாரி கீழே இறங்கத் தொடங்கினாா். அப்போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அருண் குமாா் திவாரி உயிரிழந்தாா்.

அதேபோல் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் சமயத்தில் சந்தீப் அரேவின் உடல்நிலை கடுமையாக பாதிப்படைந்தது. அவரை மலையேறுபவா்கள் மீட்டு முகாமுக்கு அழைத்து வந்தனா். அங்கு அவா் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

உயிரிழந்த இரு இந்தியா்களின் உடல்களையும் காத்மாண்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

இரு இந்தியா்கள் மற்றும் 3 நேபாளிகள் என நிகழாண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட 5 நபா்கள் உயிரிழந்துள்ளனா்.

கடந்த புதன்கிழமை சந்தீப் அரே உள்ளிட்ட 3 இந்தியா்கள் என மொத்தம் 274 போ் எவரெஸ்ட் பயணத்தை தொடங்கினா். இதுவே எவரெஸ்ட் சிகரத்துக்கு ஒரே நாளில் அதிகமானோா் மேற்கொண்ட பயணமாகும்.

summary

Two Indian mountaineers who summited Everest have died while descending, an official said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments