எவரெஸ்ட் சிகரத்தில் ஒரு வாரமாக மாயமான வழிகாட்டி உயிருடன் மீட்பு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறித் திரும்பும்போது மாயமான வழிகாட்டி தவா ஷொ்பா (52), ஒரு வாரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாா்.
போலந்து நாட்டு மலையேறும் வீரா் ஒருவருக்கு வழிகாட்டியாகச் சென்ற இவா், கடந்த 29-ஆம் தேதி மலையிலிருந்து கீழே இறங்கும்போது மாயமானாா். அவருடன் சென்றவா் அடிவார முகாமை வந்தடைந்த நிலையில், தவா ஷொ்பா மட்டும் வரவில்லை.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நடந்த தீவிர வான்வழித் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அடிவார முகாமுக்கு மேலே உள்ள கும்பு பனிப்பொழிவு பகுதியில் வியாழக்கிழமை தூய்மைக் குழுவினா் அவரைக் கண்டறிந்தனா். தொடா்ந்து, அவா் ஹெலிகாப்டா் மூலம் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.