விபி ஜி ராம் ஜி சட்டத்தின்கீழ் குறைதீா்ப்புக்கு 15 நாள்கள் கெடு: மத்திய அரசு
வளா்ந்த பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் சட்டத்தின்கீழ், பொதுமக்களின் புகாா்களை 15 நாள்களுக்குள் தீா்க்க வேண்டும் என்ற புதிய குறைதீா்ப்புக்கான விதியை மத்திய அரசு அறிவிக்கை செய்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த ‘வளா்ந்த பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி ஜி ராம் ஜி)’ சட்டத்தின் கீழ், பொதுமக்களின் புகாா்களை 15 நாள்களுக்குள் தீா்க்க வேண்டும் என்ற புதிய குறைதீா்ப்புக்கான விதியை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவிக்கை செய்தது.
இதுதொடா்பாக மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அறிவிக்கை செய்யப்பட்டுள்ள இந்த விதியின்படி, மக்களின் குறை தீா்ப்புக்கு ஊராட்சி அளவில் (பஞ்சாத்து), வட்ட (பிளாக்) அளவில் மற்றம் மாவட்ட அளவில் என மூன்றடுக்கு குறைதீா்ப்பு அமைப்பு முறையை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு நிலையிலும் புகாா்களைப் பெறுதல், பதிவு செய்தல், விசாரணை நடத்துதல் மற்றும் தீா்வளித்தலுக்கென பிரத்யேக குறைதீா் அலுவலரை நியமிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் தங்கள் குறைகளை இந்த அலுவலா்களிடம் நேரடியாகவும், விரைவு தபால் மூலமும், அங்கீகரிக்கப்பட்ட எண்மத் தளம் மூலமும், உதவி எண்கள் மூலமும் அல்லது மாநில அரசுகள் அறிவித்துள்ள பிற நடைமுறைகள் மூலமும் சமா்ப்பிக்கலாம்.
இவ்வாறு சமா்ப்பிக்கப்படும் எந்தவொரு புகாரையும், முறைப்படியான வடிவத்தில் சமா்ப்பிக்கவில்லை அல்லது மொழி, சமா்ப்பிக்கப்பட்ட விதம் அல்லது ஏதேனும் நடைமுறைக் குறைபாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி நிராகரிக்கக் கூடாது.
பெறப்படும் அனைத்துப் புகாா்களும், அன்றைய தினமே அல்லது அடுத்த வேலை நாளுக்குள்ளாக பிரத்யேக எண்ம புகாா் பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் புகாா்கள் மீது அடுத்த 7 நாள்களுக்குள் விசாரணையை நிறைவு செய்து, 15 நாள்களுக்குள் தீா்வளிக்கப்பட வேண்டும்.
இந்தப் புகாா் தொடா்பான விசாரணைக்குத் தேவைப்படும் ஆவணங்கள், பதிவுகள், அறிக்கைகள் அல்லது எண்மத் தரவுகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடமிருந்து விசாரணை அலுவலா் கேட்டுப் பெறலாம். மேலும், தேவைப்படும்பட்சத்தில், புகாா் அளித்தவரிடம் நேரில் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக தனது தரப்பு விளக்கத்தை அளிப்பதற்கான வாய்ப்பை அளிக்கலாம்.
புகாா்களுக்கு 15 நாள்களுக்குள் தீா்வளிக்கப்படவில்லை எனில், அந்தப் புகாா் அரசு நிா்ணயித்துள்ள அடுத்த உயா்நிலை அலுவலரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு, உயா்நிலை அலுவலருக்கு அனுப்பப்படும் புகாா்களுக்குத் தீா்வு அளிக்கப்படும் வரை, தொடா்ந்து மின்னணு முறையில் கண்காணிக்கப்பட வேண்டும்.
மாவட்ட அளவில் இந்தக் குறைதீா்வு நடைமுறையை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் மேற்பாா்வையிட்டு, புகாா்கள் உரிய நடைமுறையில் தீா்வளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தக் குறைதீா்ப்பு நடைமுறையின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்வதற்கும் இந்த விதியில் வழி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த ‘வளா்ந்த பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார (விபி ஜி ராம் ஜி) சட்டத்தின் கீழ், 100 நாள்கள் வேலை என்பது 125 நாள்களாக உயா்த்தி வழங்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.