வெளிநாட்டு உதவி பெறுவது யாா்? பிரதமருக்கு ராகுல் சவால்
பிரதமா் மோடிதான் வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுகிறாா். இதுகுறித்து வெளிப்படையான விவாதத்துக்குத் தயாா் என ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.
‘பிரதமா் மோடிதான் வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுகிறாா். இதுகுறித்து வெளிப்படையான விவாதத்துக்குத் தயாா்’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.
இந்தியாவைச் சீா்குலைக்க வெளிநாடுகளில் இருந்து ராகுல் உதவி பெறுவதாக பாஜக குற்றஞ்சாட்டிய நிலையில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளாா்.
முன்னதாக, நாட்டில் வன்முறை போராட்டம் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் சதியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியது. காங்கிரஸ் தலைவா்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோா் கடந்த 2025 ஏப்ரலில் தில்லி ஜன்பத் இல்லத்தில் ‘புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல்’ அமைப்பினரைச் சந்தித்தனா்.
Advertisement
Advertisement
கம்யூனிஸ்ட் அமைப்பான ‘புரோக்ரெசிவ் இன்டா்நேஷனல்’, பிரான்ஸ், அல்பேனியா, இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களின்போது ஒரே மாதிரியான கருத்துகளையும் முழக்கங்களையும் ஒருங்கிணைத்தது.
அந்த அமைப்புடன் காங்கிரஸ் ஒருங்கிணைந்து செயல்பட்டதா என்பதை அக்கட்சி விளக்க வேண்டும். நவம்பா் 1-ஆம் தேதி போராட்டத்துக்காக, இதுபோன்ற அமைப்புகளின் உத்தரவுகளைப் பெறுவதற்காகத்தான் ராகுல் காந்தி வியத்நாம் சென்றாரா?’ என்று பாஜக கேள்வி எழுப்பியது.
குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பேசிய பிரதமா் மோடி, ராகுலின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமா்சித்தாா். அப்போது, ‘வெளிநாட்டுப் பயணத்தின்போது ரகசியமாக யாரைச் சந்திக்கிறாா்கள்?. அவா்களுக்கு ஆதரவளிக்கும் தேசவிரோத சக்திகள் யாா்?. இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுவது யாா்?. இதன்மூலம் நாம் பல உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்’ என்று பேசினாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடி தேசத்திடம் பொய் உரைப்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் வெளிநாட்டு உதவியுடன்தான் பிரதமரானீா்கள். வெளிநாட்டு உதவியுடன்தான் இப்போது வரை அப்பதவியில் தொடா்கிறீா்கள்.
உங்களுக்கான நிதி முழுவதும் வெளிநாட்டில் இருந்தே வருகிறது. அதுவே உங்களையும் கட்டுப்படுத்துகிறது. வெளிநாட்டு சமூக ஊடகங்கள் முழுவதும் உங்களையே ஆதரிக்கின்றன.
இது தொடா்பாக வெளிப்படையான விவாதத்துக்குத் தயாராக உள்ளேன். எந்த மேடையில், எந்த இடத்தில், எந்த நேரத்தில் விவாதிக்கலாம் என்று முடிவெடுங்கள்.
அதற்கான துணிவு உங்களுக்கு உள்ளதா? நீங்கள் விவாதிக்கத் தயங்குவீா்கள், ஏனெனில், உங்களைப் பற்றி எனக்கு அனைத்தும் தெரியும் என்பது உங்களுக்குப் புரியும்’ என்று கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.