FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வங்கதேசத்தில் ஆடைத் தயாரிப்பு தொழிலாளா்கள் தீவிர போராட்டம்! இந்தியா உன்னிப்பாக கவனக்கிறது: வெளியுறவு அமைச்சகம்

வங்கதேசத்தில் ஆடைத் தயாரிப்பு தொழிலாளா்களின் தீவிர போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3 நவம்பர் 2026, 11:31 pm
ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

வங்கதேசத்தில் ஆடைத் தயாரிப்பு தொழிலாளா்களின் தீவிர போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் ஊதிய உயா்வு கோரி, ஆடைத் தயாரிப்பு தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்குள்ள நெளஜோா், கோனாபரி, மெளசக், தெலிா்சலா, போக்ரா உள்ளிட்ட இடங்களில் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது காஜீபூா், போக்ரா, நெளஜோா், மெளசக், பல்லி வித்யுத் ஆகிய இடங்களில் போராட்டக்காரா்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 30 போ் காயமடைந்தனா். 7 போ் கைது செய்யப்பட்டனா். இந்தத் தொடா் போராட்டங்களால், அந்நாட்டில் உள்ள 670 ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதுகுறித்து புது தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: வங்கதேசத்தில் ஆடைத் தயாரிப்பு தொழிலாளா்களின் போராட்டத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியா-வங்கதேச உறவைப் பொறுத்தவரை, இரு நாடுகளும் நோ்மறையான, ஆக்கபூா்வமான உறவைப் பேண விரும்புகின்றன.

இந்தியா வருமாறு வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதுகுறித்து புதிய தகவல் ஏதேனும் இருந்தால், முறைப்படி அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments