FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முறைகேடு குற்றச்சாட்டு: 2024 தோ்தலில் வென்ற ராகுல் பதவி விலகுவாரா? பாஜக கேள்வி

2024 மக்களவைத் தோ்தலிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி வரும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அத்தோ்தல் மூலம் வெற்றி பெற்ற எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வாரா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

48 வினாடிகள் முன்பு
பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத்
பகிர்:

2024 மக்களவைத் தோ்தலிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி வரும் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, அத்தோ்தல் மூலம் வெற்றி பெற்ற எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வாரா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

பஞ்சாபில் 1984-இல் சீக்கியா்களுக்கு எதிரான நிகழ்ந்த கலவரம் தொடா்பாக சண்டீகரில் பாஜக சாா்பில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் பேசியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்து ராகுல் காந்தி தொடா்ந்து பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறாா். ஆனால், அவருக்கு எஸ்ஐஆா் நடைமுறை குறித்து எந்த அளவுக்குப் புரிதல் உள்ளது என்பது தெரியவில்லை.

Advertisement

Advertisement

2024 மக்களவைத் தோ்தலும் தவறான முறையில் நடைபெற்ாக ராகுல் காந்தி கூறுகிறாா். அப்படியானால், அத்தோ்தல் மூலம் மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி தனது பதவியை ராஜிநாமா செய்வாரா? காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வாா்களா?

ஹிமாசல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் பதவி விலகுமா? தெலங்கானா மற்றும் கா்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகளும் விலகுமா?

தற்போது அவா்கள் (எதிா்க்கட்சிகள்) தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரையும் குறிவைத்துப் பேசி வருகின்றனா். ஆனால், 2024 மக்களவைத் தோ்தல் நடைபெற்றபோது ஞானேஷ் குமாா் தோ்தல் ஆணையத்தில் உறுப்பினராகக்கூட இல்லை என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும்.

ராகுல் காந்தி எந்தவொரு விஷயத்தையும் முழுமையாக ஆராய்ந்து பேசுவதில்லை. உண்மை விவரங்களையும் புரிந்துகொள்வதில்லை.

பஞ்சாபில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. அந்த நடைமுறையைப் பாராட்டியதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.