FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

இந்தியா வருவதற்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் முக்கிய பிரிவுகளை 13-இல் இருந்து 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

5 நவம்பர் 2026, 2:16 am
மத்திய உள்துறை அமைச்சகம்
பகிர்:

இந்தியா வருவதற்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் முக்கிய பிரிவுகளை 13-இல் இருந்து 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும், விசா விண்ணப்பத்தை 70 சதவீதம் அளவுக்கு எளிமைப்படுத்தவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டின் விசா வழிகாட்டி மறுஆய்வின் ஒரு பகுதியாக, அதன் பல்வேறு பாகங்கள் மற்றும் பின்னிணைப்புகளில் புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டின் விசா நடைமுறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துதலின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

அதன்படி, விசா வழங்கும் முக்கியப் பிரிவுகள் 13-இல் இருந்து 9-ஆகவும், துணை பிரிவுகள் 49-இல் இருந்து 23-ஆகவும் குறைக்கப்படும். விசா விண்ணப்பங்களில் நிரப்ப வேண்டிய பகுதிகளை 70 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேவையற்ற, மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளை நீக்கி, பயணிகளுக்கு உகந்த-எளிமையான விண்ணப்பத்தை அறிமுகப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.