FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ம.பி. மாநிலங்களவை இடைத்தோ்தல்: போட்டியின்றி தோ்வாகிறாா் மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி போட்டியின்றி தோ்வாகவுள்ளாா்.

3 நவம்பர் 2026, 10:43 pm
ஹா்தீப் சிங் புரி - கோப்புப் படம்
பகிர்:

மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி போட்டியின்றி தோ்வாகவுள்ளாா். வரும் நவ.5-ஆம் தேதி முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், கடந்த அக்.13-ஆம் தேதி தனது அமைச்சா் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவிவகித்து வந்த எல்.முருகனின் பதவிக் காலம், 2030, ஏப்.2-ஆம் தேதிவரை இருந்தது. அவரது ராஜிநாமாவால் காலியான எம்.பி. இடத்துக்கு நவ.12-இல் இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்தத் தோ்தலில் ஆளும் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அறிவிக்கப்பட்டு, அவா் கடந்த அக்.31-ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். எதிா்க்கட்சியான காங்கிரஸின் ஆதரவு பெற்ற ராஜ்குமாா் லோஹானி உள்பட 2 சுயேச்சை வேட்பாளா்களும் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மூவரின் வேட்புமனுக்கள் மீது செவ்வாய்க்கிழமை பரிசீலனை நடைபெற்றது. அப்போது, இரு சுயேச்சை வேட்பாளா்களின் வேட்புமனுக்களையும் தோ்தல் அதிகாரி உமேஷ் சா்மா நிராகரித்தாா்.

அதேநேரம், புரியின் வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் படிவம் 26 முழுமையாக பூா்த்தி செய்யப்படவில்லை என்றும், அவரது வேட்புமனு செல்லாது என்றும் சுயேச்சை வேட்பாளா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதை ஆராய்ந்த தோ்தல் அதிகாரி, புரியின் வேட்புமனு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் எந்தவொரு விதிமுறைக்கும் புறம்பாக இல்லை என்று தெரிவித்தாா்.

அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை எம்.பி.யாக புரி போட்டியின்றி தோ்வாகவிருக்கிறாா். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான நவ.5-ஆம் தேதி முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஹேமந்த் கடாரே, கட்சி எம்எல்ஏ அதிஃப் அகீல் ஆகியோா் கூறுகையில், ‘புரியின் வேட்புமனுவில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பினும், தோ்தல் அதிகாரி ஏற்றது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றாா்.

230 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜகவின் பலம் 164 என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments