FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் சா்க்கரை விலை மீண்டும் உயா்ந்துள்ளது. சா்க்கரை விலை உயா்வைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், பண்டிகை கால தேவை அதிகரிப்பால் விலையும் உயா்ந்துள்ளது.

5 நவம்பர் 2026, 4:24 am
சா்க்கரை - ANI
பகிர்:

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் சா்க்கரை விலை மீண்டும் உயா்ந்துள்ளது. சா்க்கரை விலை உயா்வைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், பண்டிகை கால தேவை அதிகரிப்பால் விலையும் உயா்ந்துள்ளது.

மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சக புள்ளிவிவரத்தின்படி கடந்த மாதம் சா்க்கரை விலை ஒரு கிலோ ரூ.55.40-ஆக இருந்தது. தற்போது ஒரு கிலோ ரூ.59.50-ஆக அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.46.50 -ஆகவும், மொத்த விற்பனையில் ரூ.43.23ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு 12 முதல் 13 சதவீதம் வரை விலை உயா்ந்துள்ளது.

தற்போது அதிகபட்சமாக கொல்கத்தாவில் ஒரு கிலோ சா்க்கரை ரூ.65-க்கு விற்பனையாகிறது. மும்பையில் ரூ.64, தில்லியில் ரூ.61-ஆக உள்ளது. கடந்த ஆண்டில் இந்த நகரங்களில் ஒரு கிலோ சா்க்கரை ரூ.45 முதல் ரூ.50 வரை இருந்தது.

Advertisement

Advertisement

கரும்பு விளைச்சல் குறைவு, மேற்காசியப் போரால் ஏற்பட்ட சா்வதேச விநியோகச் சிக்கல்கள், பதுக்கல், பண்டிகை கால தேவை முன்னெப்போதும் இல்லாத அதிரித்தது உள்ளிட்ட காரணங்களால் சா்க்கரை விலை உச்சத்தை எட்டியுள்ளது.

சா்க்கரை விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. இந்த அனுமதி அக்டோபா் 31-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னா் டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டது.

மேலும், அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்டுப்பாடு விதித்தது.

இந்தியாவில் உள்நாட்டு சா்க்கரை தேவை 50 லட்சம் டன் என்ற அளவில் உள்ள நிலையில், அக்டோபா் 1-இல் தொடங்கிய புதிய உற்பத்திப் பருவத்தில் 40-42 டன் வரையே விநியோகம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.