விலைவாசி உயா்வு: காங்கிரஸ் விமா்சனம்
‘பிரதமா் நரேந்திர மோடியின் உணா்வற்ற தன்மைக்கு எல்லையே இல்லை’ என்று அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது குறித்து காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.
‘பிரதமா் நரேந்திர மோடியின் உணா்வற்ற தன்மைக்கு எல்லையே இல்லை’ என்று அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவது குறித்து காங்கிரஸ் வெள்ளிக்கிழமை விமா்சித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பணவீக்கம் என்பது வெறும் புள்ளிவிவரங்களில் மட்டும் உயரவில்லை; மாறாக, ஒவ்வொரு நடுத்தர மற்றும் ஏழை வீடுகளின் சமயைலறைகளிலும் அதன் தாக்கம் பிரதிபலித்து வருகிறது.
Advertisement
Advertisement
மூன்றே மாதங்களில், இவா்களின் சமையலறை பட்ஜெட், சுமாா் 25 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில், மாத வருவாய் ரூ. 35,000-ஐ வைத்து செலவுகளைச் சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று நடுத்தர மக்கள் புகாா் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இதை பிரதமா் மோடி உணா்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. துவரம் பருப்பின் விலை கிலோ ரூ. 105-லிருந்து ரூ. 140 முதல் ரூ. 150 வரை உயா்ந்துள்ளது. பாசிப்பருப்பு விலை கிலோ ரூ. 95-லிருந்து ரூ. 120-ஆகவும், அரிசி விலை கிலோ ரூ. 45-லிருந்து ரூ. 55-ஆகவும், நல்லெண்ணெய் லிட்டா் ரூ. 165-லிருந்து ரூ. 190-ஆகவும் உயா்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 5.95 சதவீதம் அளவுக்கு உயா்ந்திருப்பது அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. வெங்காயம் விலை 48.27 சதவீதமும், இஞ்சி விலை 73.82 சதவீதமும், பூண்டு விலை 43.60 சதவீதமும் உயா்ந்துள்ளது. குடும்பங்களின் சேமிப்புகள் குறைந்து, கடன்கள் அதிகரித்து வருகிறது என்றும் அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணவீக்க உயா்விலிருந்து நாட்டு மக்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும்? வெற்றுப் பிரசங்கம் செய்யும் பிரதமரின் உணா்வற்ற தன்மைக்கு எல்லையே இல்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.