உணவுப் பொருள் விலை உயர்வைக் கண்டித்து மோடி அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருள்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம்..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருள்களின் விலையுயர்வைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பானாருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ரிசர்வ் வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி, சில உணவுப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது ஒவ்வொரு குடும்பத்தின் செலவினங்களையும் பாதிக்கின்றது.
Advertisement
Advertisement
தீபாவளியை முன்னிட்டு உலர் பழங்களின் விலை, அதாவது பிஸ்தா, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 300 வரை அதிகரித்துள்ளது. அரவு தரவுகளின்படி பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழலில், ஒரு சாதாரண குடும்பம் தீபாவளி பண்டிகையை எவ்வாறு கொண்டாடுவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில், வெங்காயத்தின் விலை 85 சதவீதமும், சர்க்கரையின் விலை 34 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தக்காளி, துவரம் பருப்பு. கடலை பருப்பு ஆகியவற்றின் விலைகள் முறையே 8.5 சதவீதம், 3.5 சதவீதம் மற்றும் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளன.
தீபாவளிக்கு முன்னதாக, பாதாம் விலை கிலோவுக்கு ரூ. 1,300-ஐ எட்டியுள்ளது. அதேபோல், பச்சை ஏலக்காயின் விலை ரூ. 300 வரை உயர்ந்துள்ளது. சாமானிய மக்களின் அவலநிலை குறித்து முற்றிலும் மௌனம் காக்கிறார் பிரதமர்.
ஒருபுறம், கட்டுக்கடங்காத பணவீக்கம் குடும்பங்களின் நிதிநிலையைச் சிதைத்துள்ளது, மறுபுறம், கடந்த பத்தாண்டுகளில் உண்மையான வருமானம் சரிந்துள்ளது. பிரதமர் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, பொதுமக்களின் கவலைகளில் கவனம் செலுத்துங்கள்.
விலை உயர்வு குறித்த சிக்கலைக் காங்கிரஸ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதுடன், மக்கள் விரோத கொள்கைகளை அரசு பின்பற்றுவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.