FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு

எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது குறித்து...

17 அக்டோபர் 2026, 9:28 pm IST
கரும்பு உற்பத்தி குறைவு - பிரதிப் படம்
பகிர்:

எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

நடப்பாண்டில் பருவமழை குறைந்ததால் கரும்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் இரண்டாவது அதிகளவு சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியாவில் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கரும்பின் மூலப்பொருள்களில் இருந்து எத்தனால் கொள்முதல் செய்யப்படுவதற்கு நவம்பர் 1 முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Advertisement

Advertisement

அரசுக்குச் சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனம், மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச் சாற்றிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, சர்க்கரைப் பாகிலிருந்து எத்தனால் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், உயிரி எரிபொருள்கள் மீதான தேசிய கொள்கையின்கீழ் அனுமதிக்கப்பட்ட மூலப்பொருள்களான சேதமடைந்த உணவு தானியங்கள், உபரி அரிசி, மக்காச் சோளம் முதலானவற்றிலிருந்து எத்தனாலை கொள்முதல் செய்யலாம்.

சர்க்கரையின் உள்நாட்டு இருப்பைப் பாதுகாக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

summary

Govt Halts Sugar-Based Ethanol Procurement Amid Weak Monsoon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments