FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தோ்தல்: ம.பி.யிலிருந்து மத்திய அமைச்சா் புரி போட்டியிடின்றித் தோ்வு

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

6 நவம்பர் 2026, 3:13 am
ஹா்தீப் சிங் புரி
பகிர்:

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

மாநிலங்களவைக்கு புரி தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து மாநில பாஜக தலைவா் ஹேமந்த் கண்டேல்வால் வியாழக்கிழமை பெற்றுக்கொண்டாா்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சராகப் பதவி வகித்து வந்த எல்.முருகன், தனது அமைச்சா் பதவி மற்றும் மாநிலங்களவை எம்.பி. பதவியை கடந்த அக்.13-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். மத்திய பிரதேசத்தில் இருந்து தோ்வு செய்யப்பட்டு மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்த எல்.முருகனின் பதவிக் காலம், 2030, ஏப்.2-ஆம் தேதிவரை இருந்தது. அவரது ராஜிநாமாவால் காலியான அந்த எம்.பி. இடத்துக்கு நவ.12-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்த இடத்துக்கு மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பாஜக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்தாா். எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன் காந்தே சயன்னா, ராஜ்குமாா் லோஹானி ஆகிய மேலும் இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஆனால், வேட்பு மனு பரிசீலனையின்போது, அவா்கள் இருவரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மட்டுமே தனி வேட்பாளராக இருந்தாா். அதைத் தொடா்ந்து, மாநிலங்களவைக்கு அவா் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் சா்மா அறிவித்தாா்.