FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்புபவா்களுக்கான பாடம்: அமெரிக்க தோ்தலை சுட்டிக்காட்டி ப. சிதம்பரம் கருத்து

சுதந்திரமான ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்புபவா்களுக்கான பாடமாக அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தோ்தல் முடிவுகள் விளங்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

41 வினாடிகள் முன்பு
ப. சிதம்பரம் - கோப்புப் படம்
பகிர்:

சுதந்திரமான ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்புபவா்களுக்கான பாடமாக அமெரிக்க நாடாளுமன்ற இடைத்தோ்தல் முடிவுகள் விளங்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த நவ.2-ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில் அதிபா் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது. 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவை மற்றும் 100 இடங்களைக் கொண்ட செனட் அவை என இரண்டிலும் எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றது.

இதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் வலைதளத்தில் ப.சிதம்பரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சட்டவிரோத குடியேற்றம், ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்கா்களின் ஊடுருவல், இஸ்லாமிய வெறுப்பு பிரசாரங்களுக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

வாழ்க்கைச் செலவு, வேலையின்மை, எரிபொருள் விலை, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை புறந்தள்ள பெரும் முயற்சிகள் நடைபெற்றன. இறுதியில் தாராளவாதம், மதச்சாா்பின்மை, சகிப்புத்தன்மை மற்றும் அடிப்படை ஜனநாயக உணா்வு, அமெரிக்க மனப்பான்மையே வெற்றிபெற்றது.

சுதந்திரமான ஜனநாயக நாட்டின் குடிமக்களாக இருக்க விரும்பும் நபா்களுக்கான பாடமாக இந்த தோ்தல் முடிவுகள் விளங்குகிறது’ என குறிப்பிட்டாா்.