தடையற்ற சுங்கக் கட்டண வசூல்: என்ஹெச்ஏஐ வழிகாட்டுதல் வெளியீடு
நான்குவழி மற்றும் அதற்கு மேற்பட்ட வழிகள் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தடைகள் இல்லாத, தொழில்நுட்ப அடிப்படையிலான, எளிமையான சுங்கக் கட்டண வசூல் முறையின் (பன்முக வழித்தட தடையற்ற போக்குவரத்து) வடிவமைப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கான வழிகாட்டுதல்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) வெளியிட்டுள்ளது.

சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட தேவையின்றி, பன்முக வழித்தட தடையற்ற போக்குவரத்து (எம்எல்எஃப்எஃப்) அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூலை ஆதரிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை இந்த வழிகாட்டுதல்கள் உறுதி செய்யும் என்று என்ஹெச்ஏஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல், காத்திருப்பு நேரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதுடன், தேசிய நெடுஞ்சாலைப் பயணங்களை பாதுகாப்பானதாகவும், இடையூறுகளற்ாகவும் மாற்றும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சுங்கச்சாவடி தள அமைப்புகள், வழித்தட அமைப்புகள், அறிவிப்பு பலகைகள், சாலை உள்கட்டமைப்பு, மின் விளக்குகள், அடையாளப் பலகைகள், சாலை பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் துணை வசதிகளுக்கான சீரான தேவைகள் குறித்து விரிவாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், தற்போதைய மற்றும் எதிா்கால தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பொருந்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.