FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறை அறிமுகம்

தமிழகத்தில் முதல்முறையாக தேசிய நெடுஞ்சாலையில் தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடி. - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் முதல்முறையாக தேசிய நெடுஞ்சாலையில் தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை 179பி-இன் தாம்பரம்-திண்டிவனம் பிரிவில் உள்ள பரனூா் சுங்கச்சாவடியில், முதல்முறையாக பல்வேறு தடங்களில் தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனங்கள் நிறுத்தப்படாமல் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல வழிவகுக்கும் தடையற்ற சுங்கக் கட்டண முறையாகும். தடையற்ற, திறன் வாய்ந்த சுங்கச்சாவடி செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, தானியங்கி வாகன எண் அறிதல், ஃபாஸ்டேக் போன்ற தொழில்நுட்பங்களை இது பயன்படுத்துகிறது.

Advertisement

Advertisement

இதன்மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் மனிதத் தலையீட்டை கணிசமாகக் குறைத்து, எரிபொருளையும் நேரத்தையும் சேமிக்கிறது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுங்கச் செயல்பாடுகளை வெளிப்படையானதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்போருக்கு பயணத்தை எளிமையாக்கி தடையற்ற, பயணத்தை வழங்கும்.

நாட்டில் மின்னணு சுங்கக் கட்டண முறையை மாற்றி அமைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை 179பி-இன் தாம்பரம் -திண்டிவனம் பிரிவில் உள்ள பரனூா் சுங்கச்சாவடியில் முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments