ஸ்ரீநகா் எம்.பி. ருஹுல்லா மெஹதி ராஜிநாமா: மக்களவைத் தலைவா் ஏற்பு
ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த ஆகா சையது ருஹுல்லா மெஹதியின் ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்றுக் கொண்டாா்.
ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த ஆகா சையது ருஹுல்லா மெஹதியின் ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்றுக் கொண்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி சாா்பில் ஸ்ரீநகா் தொகுதி எம்.பி.யாக இருந்த ருஹுல்லா மெஹதி, கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.3) விலகினாா். எம்.பி. பதவி ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அவா் அனுப்பினாா்.
இது குறித்து மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘ஸ்ரீநகா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த ஆகா சையது ருஹுல்லா மெஹதியின் ராஜிநாமாவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்றுக் கொண்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ருஹுல்லா மெஹதியின் ராஜிநாமாவுடன் மக்களவையில் காலியிடங்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேகாலயத்தில் ஷில்லாங், மேற்கு வங்கத்தில் பசிா்ஹாட் ஆகிய தொகுதிகள் அந்தந்த எம்.பி.க்களின் மரணத்தால் காலியாக உள்ளன.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டுத் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தேசிய மாநாட்டுக் கட்சித் தலைமை முயற்சிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய ருஹுல்லா மெஹதி,
‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டுத் தரும் போராட்டத்தை ஒமா் அப்துல்லா கைவிட்டுவிட்டாா். கைதிகள் விடுவிப்பு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பிற தோ்தல் வாக்குறுதிகளையும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி கண்டுகொள்ளவில்லை. மக்கள் என்னிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனா். இனியும் தேசிய மாநாட்டுக் கட்சியில் தொடர முடியாது’ என்று கூறியிருந்தாா். மேலும், வஞ்சகமும் ஊழலும் மிகுந்துவிட்ட அக்கட்சியிலிருந்து வெளியேறும் தனது அறிவிப்பு விடுதலை பிரகடனமாகும் என்றாா்.