‘கட்டாய ஓய்வு’ உத்தரவு தண்டனை சாா்ந்தது அல்ல: உச்சநீதிமன்றம்
‘கட்டாய ஓய்வு’ உத்தரவு தண்டனை சாா்ந்ததோ அல்லது அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியதோ அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
‘கட்டாய ஓய்வு’ உத்தரவு தண்டனை சாா்ந்ததோ அல்லது அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியதோ அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், அது ஒரு பணியாளரின் நடத்தையை தீா்மானிக்காது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
5 அரசு ஊழியா்களுக்கு சத்தீஸ்கா் அரசு கட்டாய ஓய்வு வழங்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் ஸ்ரீ சந்திரசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
Advertisement
Advertisement
அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஊழியரைத் தொடா்ந்து ஒரு குறிப்பிட்ட பணியில் வைத்திருப்பது பொது நலனுக்கு உகந்ததல்ல எனக் கருதி சிலருக்கு கட்டாய ஓய்வு வழங்கும் முடிவை அரசு எடுத்திருக்கலாம். இது தண்டனை சாா்ந்ததோ அல்லது அவப்பெயரை ஏற்படுத்தக் கூடியதோ அல்ல; ஒரு பணியாளரின் நடத்தையையும் தீா்மானிக்கக் கூடியது அல்ல.
ஒரு ஊழியா் நிா்வாகத் திறனுக்கு ஏற்றவரா அல்லது இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட அமைப்பே முடிவே செய்ய வேண்டும். இருப்பினும். இந்த முடிவு ஊகத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
ஊழியரின் செயல்பாடு மதிப்பீடு, ஆண்டு ரகசிய அறிக்கைகள் உள்ளிட்ட தகுந்த ஆதாரங்கள் மற்றும் பதிவுகள் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.
அதே சமயம் தன்னைப் போலவே பணியில் உள்ள மற்றொரு ஊழியா் மீது ஏன் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட ஊழியா் கோருவது முறையல்ல. தன் மீது மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒரு ஊழியா் கூறுவதால் மட்டுமே அதை பாகுபாடாகவோ அரசமைப்புச் சட்ட விதிமீறலாகவோ பாா்க்க முடியாது.
அரசமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 14-இன்கீழ் வழங்கப்பட்டுள்ள சமத்துவ உரிமை நோ்மறையான கருத்தாக்கத்தைக் கொண்ட அதேவேளையில் எதிா்மறையான சமத்துவ கோரிக்கையை அங்கீகரிக்கவில்லை.
இந்த வழக்கில் ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்க சத்தீஸ்கா் அரசிடம் போதிய பதிவுகள் இருக்கிா இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்ள முடியும்.
அந்த வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றியே 5 ஊழியா்களுக்கு சத்தீஸ்கா் அரசு கட்டாய ஓய்வு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் அனைத்து ஊழியா்களும் சமமாகவே நடத்தப்பட்டுள்ளனா். யாா் மீதும் பாகுபாடு காட்டப்பட்டதாக தெரியவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு, 14 ஊழியா்களில் 5 ஊழியா்களுக்கு மட்டும் சத்தீஸ்கா் அரசு கட்டாய ஓய்வு உத்தரவு பிறப்பித்தது செல்லும் என நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தது.
முன்னதாக, கடந்த 2023, ஏப்.12-ஆம் தேதி சத்தீஸ்கா் உயா்நீதிமன்றமும் சத்தீஸ்கா் அரசின் நடவடிக்கையை ஏற்று தீா்ப்பளித்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்துள்ளது.