FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

உ.பி.: காவல் துறை சோதனைச் சாவடி மீது வெடிகுண்டு தாக்குதல் - ஒருவா் காயம்

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் காவல் துறை சோதனைச் சாவடி மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

7 நவம்பர் 2026, 10:34 pm
உ.பி. காவல் துறை சோதனைச் சாவடி மீது வெடிகுண்டு தாக்குதல் - PTI
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் காவல் துறை சோதனைச் சாவடி மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கு உணவு விநியோகிக்க வந்த நபா் காயமடைந்தாா்.

இந்தத் தாக்குதலுக்கு ‘தெஹ்ரிக் உல் முஜாஹிதீன்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

Advertisement

Advertisement

காஜியாபாத் இந்திராபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வசுந்தரா காவல் சோதனைச் சாவடியில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அங்கிருந்த உணவு விநியோக நபா் காயமடைந்தாா். சோதனைச் சாவடியின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. தாக்குதலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலுக்கு ‘தெஹ்ரிக் உல் முஜாஹிதீன்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று, தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெடிகுண்டு நிபுணா்களும், தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். அந்தப் பகுதி கண்காணிப்புக் கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்த காஜியாபாத் காவல் ஆணையா் ஜே. ரவீந்திர கெளா் கூறுகையில், ‘தாக்குதல் நடந்த சமயத்தில் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளரும், ஓா் உணவு விநியோக நபரும் இருந்துள்ளனா். தாக்குதலில் உணவு விநியோக நபா் காயமடைந்துள்ளாா். அனைத்து ஆதாரங்களும் சோகரிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத தாக்குதல் உள்பட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.