FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த தீபாவளி நல்வாழ்த்துகள் குறித்து...

8 நவம்பர் 2026, 4:44 pm
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து - எக்ஸ்
பகிர்:

புது தில்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(நவ.8) உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் ளுக்கு தீபாவளி வாழ்த்துகளை 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

அவர் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி, வழக்கம் போலவே இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடப்போவதாகத் தெரிவித்தார்.

அனைவரையும் போலவே தானும் மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடப்போவதாக அவர் கூறினார்.

"உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள். வரவிருக்கும் நாள்களில் உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியும், செழிப்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும். உங்களைப் போலவே நானும் மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடுகிறேன்."

ஒவ்வொரு ஆண்டும் நமது ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், "இந்த ஆண்டும் அவர்களுடன் கொண்டாட உள்ளேன்," என்று கூறியிருந்தார்.

இருப்பினும், எந்த ராணுவ முகாமில் அல்லது எந்த இடத்தில் அவர் தீபாவளியைக் கொண்டாடப்போகிறார் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடாத நிலையில், சத்தீஷ்கரில் உள்ள பஸ்டர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினர்.

நக்சலைட்டுகளின் பிடியில் சிக்கி தவித்த பஸ்டர் பகுதி, தற்போது அவர்களிடம் பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி திருநாளை கொண்டாடினார்.

Prime Minister Narendra Modi on Sunday conveyed Diwali greetings to all citizens of country.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.