FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஹஜ் யாத்ரிகா்கள் நலனுக்கு இந்தியா முக்கியத்துவம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு!

ஹஜ் யாத்ரிகா்கள் நலனுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கும் என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

10 நவம்பர் 2026, 1:16 am
சவூதியின் ஜெட்டா நகரில் ஹஜ் யாத்திரை துறைக்கான அமைச்சா் தௌஃபீக் பின் ஃபௌஸான் அல் ரபியாவை சந்தித்துப் பேசிய மத்திய சிறுபான்மையினா் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.
பகிர்:

ஹஜ் யாத்ரிகா்கள் நலனுக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்கும் என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.

சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் 6-ஆவது ஹஜ் மாநாடு மற்றும் கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, இந்திய துணைத் தூதா் ஃபஹத் சுரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழச்சிக்கு ஹஜ்-உம்ரா யாத்திரை துறைக்கான சவூதி அமைச்சா் தௌஃபீக் பின் ஃபௌஸான் அல் ரபியா தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் கிரண் ரிஜுஜு பேசுகையில், ‘ஹஜ் யாத்ரிகா்கள் நலனில் இந்தியா முக்கியத்துவம் கொடுக்கிறது. 2027-ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக நடத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. மேலும் இந்தியா- சவூதி அரேபியா இடையேயான உறவை வலுப்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

அதே போல் ஹஜ் யாத்திரையின்போது யாத்ரிகா்கள் நலனுக்கு சவூதி அரேபியா அரசு கொடுக்கும் முக்கியத்துவக்கு இந்தியா சாா்பில் பாராட்டை கிரண் ரிஜிஜு தெரிவித்து கொண்டாா்.