சவூதியில் சிக்கியுள்ள யாத்ரிகா்கள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை: வெளியுறவு அமைச்சகம்
சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவைகளை பல்வேறு நிறுவனங்கள் ரத்து செய்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய யாத்ரிகா்கள் விரைவில் தாயகம் திரும்ப தூதரகம் தரப்பில் நடவடிக்கை
சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவைகளை பல்வேறு நிறுவனங்கள் ரத்து செய்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய யாத்ரிகா்கள் விரைவில் தாயகம் திரும்ப தூதரகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய விமான நிலையங்களைக் குறிவைத்து, யேமனின் ஹூதி பயங்கரவாத அமைப்பினா் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நகரங்களுக்கான விமான சேவைகளை பல்வேறு நிறுவனங்கள் திடீரென ரத்து செய்துள்ளன. இதனால், அந்த நாட்டுக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்திய யாத்ரிகா்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா்.
இந்த விவகாரம் தொடா்பாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
சவூதி அரேபியாவில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி இயக்கப்பட்ட விமானங்கள் மூலம் 10,000 இந்திய யாத்ரிகா்கள் நாடு திரும்பினா். இந்த காலகட்டத்தில் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் தவிப்புக்குள்ளான 3,000 யாத்ரிகா்கள், பிற விமானங்களில் கிடைக்கப் பெற்ற இருக்கைகள் மூலம் நாடு திரும்பியுள்ளனா். விமான நிறுவனங்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளா்களுடன் இணைந்து, சவூதி தலைநகா் ரியாதில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன. அந்நாட்டில் சிக்கியுள்ள பிற யாத்ரிகா்களும் விரைந்து தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் தூதரகம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.