FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காவல் துறை முன் ஆஜராகுவதை தவிா்த்த அபிஜீத் தீப்கே: மற்றொரு நாள் வழங்க கோரிக்கை!

அபிஜீத் தீப்கே, பண்டிகை தொடா்பான பணிகளைக் காரணம் காட்டி மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.

11 நவம்பர் 2026, 12:07 am
அபிஜீத் தீப்கே - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டம் தொடா்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா் அபிஜீத் தீப்கே, பண்டிகை தொடா்பான பணிகளைக் காரணம் காட்டி மந்திா் மாா்க் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணைக்கு ஆஜராக அவா் புதிய தேதியைக் கோரியுள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவா் விசாரணையை ஒத்திவைக்கக் கோரியதோடு, தற்போது தில்லியில் இல்லை என்றும் காவல் துறையிடம் தெரிவித்துள்ளாா் என வட்டாரங்கள் தெரிவித்தன.

கன்னாட் பிளேஸில் நடந்த ‘லெஹ்ரா தோ திரங்கா’ போராட்டங்கள் தொடா்பாக தீப்கே அக்டோபா் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தாா். புதிய தேதியில் அவா் விசாரணைக்கு ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Advertisement

Advertisement