அயோத்தியை உலகளாவிய சநாதன யாத்திரைத் தலைநகராக மாற்றுவோம்! அகிலேஷ் வாக்குறுதி!
பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அகிலேஷ் யாதவின் வாக்குறுதி பற்றி..
அயோத்தியில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்கி, அதை உலகளாவிய சநாதன யாத்திரையின் தலைநகராக மாற்றுவோம் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி அளித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
அயோத்தியின் கண்ணியத்தை மீட்டெடுக்கவும், அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பாதிக்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தனது கட்சி உறுதியுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ராமர் கோயிலில் நடந்த திருட்டு சம்பவத்தால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, கோயில் நிர்வாகத்தில் வெளிப்படையான முறையைத் தனது கட்சி கொண்டு வரும்.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை வழங்கி, அயோத்தியை சநாதன யாத்திரையின் உலகளாவிய தலைநகராக மாற்றுவோம்.
அயோத்தியில் பாரம்பரிய படகுச் சேவைகளை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் படகோட்டிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ராமாயணத்தில் இடம்பெறும் ஸ்ரீங்கவேர்புரத்தின் மன்னரும், நிஷாத பழங்குடியினத் தலைவருமான நிஷாதராஜனுக்கும், பகவான் ராமருக்கும் இடையிலான பிணைப்பை மீண்டும் முன்னிலைப்படுத்தவும் அவர் உறுதியளித்தார்.
அயோத்தியை வெளியூர் ஒப்பந்ததாரர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதாகவும், அங்கு நடைபெற்ற நிலப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
மேலும், நியாய விலை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மக்களுக்கு, அவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எண்ணெய், நெய் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.