2028 டிச.31-க்குள் குஜராத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்: அமித் ஷா உறுதி
குஜராத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தி அளித்திருப்பது தொடர்பாக...
2028 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குஜராத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
குஜராத்தில் உள்ள தனது காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ரூ. 1,024 கோடி மதிப்பிலான 30 வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய அமித் ஷா, தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஒரு சமூகத் தலைவராகத் தனது பயணம் 'ராமபீர் குன்று' பகுதியில் தொடங்கியதை மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோரின் தலைமையின் கீழ், குஜராத் முழுவதும் விரிவான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
கடந்த ஏழு ஆண்டுகளில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ரூ.25,000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறிய அவர், பசுமையான மற்றும் மேம்பட்ட காந்திநகர் மக்களவைத் தொகுதியை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதே வரும் காலங்களுக்கான இலக்கு என்று தெரிவித்தார்.
மேலும், 2028-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குஜராத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.