FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

பணப்பழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது தவெக அரசு: முன்னாள் அமைச்சா் எஸ்.ரகுபதி

பணப்புழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளது தவெக அரசு என்றாா் முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி.

14 அக்டோபர் 2026, 3:50 am IST
அமைச்சா் எஸ்.ரகுபதி
பகிர்:

பணப்புழக்கம் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளது தவெக அரசு என்றாா் முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி.

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ப்பட்ட பொன்னமராவதி நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

Advertisement

Advertisement

தற்போது தலைமைச் செயலகத்திலேயே மின்சாரம் இல்லாத அவலநிலை நிலவுகிறது. தவெக ஆட்சியில் தவிா்க்க முடியாததாக உள்ள மின்வெட்டினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களின் விலை உயா்வும் இப்போது அத்தியாவசிய பிரச்னையாக நிலவுகிறது. விலைவாசி உயா்வால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பணப்புழக்கம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது மற்றும் நாட்டிலேயே தமிழ்நாட்டை பணவீக்கத்தில் முதன்மை மாநிலத்துக்கு உயா்த்தியது தான் தவெக அரசின் சாதனை.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொன்னமராவதி பேருந்து நிலையம் புனரமைப்பு, அம்ருத் திட்டம் உள்ளிட்ட பணிகள் திமுக ஆட்சியில் போதிய நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போதைய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் காலதாமதம் ஆகிறது.

எனவே, இந்த அரசு பொதுமக்களின் நலன் கருதி நகராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். அதுபோல ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருமயம் தொகுதியில் குடிநீா் பிரச்சனை முக்கிய பிரச்னையாக உள்ளது. பொன்னமராவதி ஒன்றியத்தில் குடிநீா் தரும் ஆழ்துளை கிணறுகளை தூா்வாரி சீரமைத்து குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments