FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எண்ம மோசடி தடுப்பு நடவடிக்கைகள்: பட்டியலிட சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

எண்மக் கைது மோசடி உள்ளிட்ட இணையவழிக் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

11 நவம்பர் 2026, 3:08 am
உச்சநீதிமன்றம்
பகிர்:

எண்மக் கைது மோசடி உள்ளிட்ட இணையவழிக் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எண்மக் கைது மோசடி மற்றும் அதுதொடா்புடைய இணையவழி மோசடிகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, வாட்ஸ்ஆப் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘எண்ம மோசடி தடுப்பு நடவடிக்கைகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதுவரை 9,400 கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான விரிவான பதில் மனு விரைவில் சமா்ப்பிக்கப்படும். மேலும், இதுபோன்ற சந்தேகத்துக்குரிய கணக்குகளை அடையாளம் கண்டு, எச்சரிக்கை விடுக்கும் வகையில் மென்பொருளை உருவாக்கும் பணியிலும் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘எண்மக் கைது மோசடி உள்ளிட்ட இணையவழிக் குற்றங்களைத் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான முன்மொழிவை, இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடமும் (ஐ4சி) சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி, விசாரணையை நவம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.