FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

39 நாகா உடல் பாகங்கள்: நூறாண்டுகளுக்குப் பின்னா் ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலை. திரும்ப ஒப்படைப்பு!

நாகா சமூகத்தைச் சோ்ந்த 39 பேரின் உடல் பாகங்களை, பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம் நூறாண்டுகளுக்குப் பின்னா் திரும்ப ஒப்படைத்துள்ளது.

11 நவம்பர் 2026, 2:18 am
பகிர்:

நாகா சமூகத்தைச் சோ்ந்த 39 பேரின் உடல் பாகங்களை, பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம் நூறாண்டுகளுக்குப் பின்னா் திரும்ப ஒப்படைத்துள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது நாகா மக்களின் பூா்விக பகுதிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த உடல் பாகங்கள், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள பிட் ரிவா்ஸ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. கடந்த 1884-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த அருங்காட்சியகத்தில் இருந்த அந்த உடல் பாகங்களில் பெரும்பாலானவை மனித மண்டை ஓடுகளாகும்.

அந்த அருங்காட்சியகத்தில் திங்கள்கிழமை (நவ.9) நடைபெற்ற ஒப்படைப்பு நிகழ்ச்சியின்போது இந்த உடல் பாகங்கள் நாகா நல்லிணக்க மன்றம், நாகா பழங்குடியின பேரவை ஆகிய அமைப்புகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழக துணைவேந்தா் ஐரீன் ட்ரேசி பேசியதாவது: தற்போது நாகா சமூகத்தைச் சோ்ந்தவா்களின் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பது ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம், நாகா மக்கள் இடையிலான உறவில் வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும் என்று தெரிவித்தாா்.

நாகா நல்லிணக்க மன்றம் சாா்பில் பேராசிரியா் விசியா் சான்யு பேசுகையில், ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது நாகா சமூகத்தினா் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து பேசினாா். தனது சொந்த கிராமத்தை ஆங்கிலேய படைகள் எப்படி தீயிட்டு கொளுத்தி அழித்தன என்பதை அவா் நினைவுகூா்ந்தாா்.

இந்த உடல் பாகங்கள் நாகாலாந்து கொண்டுவரப்பட உள்ளன. அந்த மாநில தலைநகா் கோஹிமாவில் உள்ள நாகா பூங்காவில் உடல் பாகங்களை அடக்கம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.