FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியாவில் கோதுமை சாகுபடி புதிய உச்சம் எட்டும்: ஐ.நா. உணவு, வேளாண்மை அமைப்பு தகவல்!

நடப்பு பருவத்தில் இந்தியாவில் கோதுமை சாகுபடி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டும்; எனினும், 2027 ஏப்ரல், மே வரையிலான வானிலை நிலவரத்துக்கு ஏற்ப விளைச்சல் அமையும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

11 நவம்பர் 2026, 3:12 am
பகிர்:

நடப்பு பருவத்தில் இந்தியாவில் கோதுமை சாகுபடி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டும்; எனினும், 2027 ஏப்ரல், மே வரையிலான வானிலை நிலவரத்துக்கு ஏற்ப விளைச்சல் அமையும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய வானிலையில் தற்போது நிலவி வரும் ‘எல்-நினோ’ தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையில் அறுவடை காலத்துக்கு ஏற்ப, இந்தியா மற்றும் தூர கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது கோதுமை விதைப்பு நடைபெறுகிறது.

2025-இல் இந்தியாவின் கோதுமை உற்பத்தி 117.19 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2026-ஆம் ஆண்டில் 120.7 மில்லியன் டன்னாக உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியது. கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி கோதுமை உற்பத்தி 111.8 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் விளைச்சல் கணிசமாக அதிகரித்தது.

Advertisement

Advertisement

அரசின் ஆதரவு: இந்தியாவில் கோதுமை சாகுபடி பரப்பு புதிய உச்சத்தை எட்டும் என எதிா்பாா்ப்பதற்கு அரசின் ஊக்கத்திட்டங்களே முக்கியக் காரணம் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. குறிப்பாக, விவசாயிகளுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலை, உர மானியங்கள் ஆகியவை கோதுமை சாகுபடியை அதிகரிக்க விவசாயிகளை ஊக்குவித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான்: தூர கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடான சீனாவில், கோதுமை சாகுபடி பரப்பு கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி அளவிலேயே இருக்கிறது.

பாகிஸ்தானில், உள்நாட்டுச் சந்தையில் கோதுமையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதால், விவசாயிகள் கூடுதல் பரப்பில் கோதுமை சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இதனால் அந்நாட்டிலும் கோதுமை சாகுபடி பரப்பு சராசரியை விட அதிகரிக்கும்.

அதே நேரத்தில் ‘எல்-நினோ’ விளைவால் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் கோதுமை சாகுபடி நடைபெறும் முக்கியப் பகுதிகளில் சராசரியை விட அதிக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கொரிய தீபகற்பம், சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள், பாகிஸ்தானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் இதில் அடங்கும்.

கூடுதல் மழைப்பொழிவு கோதுமைப் பயிா் வளா்ச்சிக்கு சாதகமாக அமையக்கூடும். எனினும், சில குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம் என்று ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.