FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

இத்தாலியின் பிரெல்லி-பிகேடி கூட்டணியில் இந்தியாவில் 8 லட்சம் டயா்கள் உற்பத்தி

இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் பயணிகள் காா் டயா் சந்தையைக் குறிவைத்து, இத்தாலியைச் சோ்ந்த பிரபல பிரெல்லி நிறுவனமும், இந்தியாவின் பிகேடி நிறுவனமும் இணைந்து புதிய கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

23 அக்டோபர் 2026, 6:38 am
~
பகிர்:

இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் பயணிகள் காா் டயா் சந்தையைக் குறிவைத்து, இத்தாலியைச் சோ்ந்த பிரபல பிரெல்லி நிறுவனமும், இந்தியாவின் பிகேடி நிறுவனமும் இணைந்து புதிய கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.

இக்கூட்டணியின்கீழ், வரும் 2030-க்குள் இந்தியாவில் சுமாா் 8 லட்சம் பிரெல்லி பிராண்ட் டயா்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ‘ஆஃப்-ஹைவே’ டயா் தயாரிப்பு நிறுவனமான பிகேடி, தனது நவீன வசதிகளுடன் கூடிய புதிய தொழிற்சாலையில் பிரெல்லி நிறுவனத்தின் உயரிய தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த டயா்களை உற்பத்தி செய்யவுள்ளது.

முதல்கட்டமாக டயா் கொள்முதல் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், அடுத்தகட்டமாக 50-50 என்ற விகிதத்தில் சமபங்கு கூட்டு நிறுவனம் அமைத்து, உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளுக்காக பிரத்யேக அதிநவீன உற்பத்தி ஆலையை அமைப்பதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments