FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்

சுயசரிதை புத்தகத்தில் புற்றுநோய் பாதிப்பு குறித்து முதல் முறையாக மனம் திறந்தார் சோனியா...

சோனியா - எக்ஸ்
பகிர்:

காங்கிரஸ் தலைவர் சோனியா உடல்நலம் குறித்து இதுநாள்வரை பேசப்பட்டு, உறுதிப்படுத்தப்படாத விவகாரம் சுயசரிதை புத்தகம் மூலம் வெளியாகியிருக்கிறது.

சோனியா காந்தி, தனக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவலை, இந்த சுயசரிதை புத்தகம் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

Advertisement

Advertisement

மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் போது சோனியாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பிலான 526 பக்கங்கள் கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை சோனியா செவ்வாயன்று வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில், அவரது இளமைப்பருவம், காதல், ராஜீவ் காந்தி, குழந்தைகள், இந்திரா காந்தி, அரசியல் வாழ்வு என பல விவகாரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில்தான், தான் புற்றுநோய் பாதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டது குறித்தும் தெரிவித்துள்ளார். இத்தாலியில் ஒரு முறையும், அமெரிக்காவில் ஒரு முறையும் புற்றுநோய்க்கான அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார.

2010ஆம் ஆண்டில் மார்பகப் புற்றுநோய் பாதித்ததாகவும், ஊடக வெளிச்சம் காரணமாக, தான் இந்தியாவை தவிர்த்துவிட்டு, வெளிநாடு சென்று அறுவைசிகிச்சை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிறகு சில ஆண்டுகள் கழித்து, வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது, கணையம் அருகே மற்றொரு கட்டி கண்டுபிடிக்கப்பட்டு, அது புற்றுநோய் கட்டியாக மாறுவதற்கு முன்பே, அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, 2016ஆம் ஆண்டு வாரணாசியில், சாலைவலத்தின்போது மயக்கமடைந்து கீழே விழுந்ததில், எனது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கும் அறுவைசிகிச்சை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மிகப்பெரிய அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்து, தனக்கு உடல்நலப் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதில்லை, பருவக்கால நோய்களான சளி, இருமலைத் தவிர என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டு காலமாக அவர் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தது ஊடகங்களில் செய்தியாகி வந்த நிலையில், தற்போது புற்றுநோய்க்கு அவர் சிகிச்சை பெற்றது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.