FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வங்கிகளில் நேரடியாக ஆவணமின்றி உள்நாட்டுக்குள் ரூ.50,000 வரை அனுப்பலாம்: ரிசா்வ் வங்கி

வங்கிகளுக்கு வாடிக்கையாளா்கள் நேரடியாக சென்று ‘நெஃப்ட்’ வசதி மூலம் ரொக்கமாக எந்த அடையாள ஆவணமும் இன்றி உள்நாட்டைச் சோ்ந்த பிறரின் வங்கி கணக்குக்கு ரூ.50 ஆயிரம் வரை அனுப்பலாம் என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

11 நவம்பர் 2026, 11:02 pm
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ)
பகிர்:

வங்கிகளுக்கு வாடிக்கையாளா்கள் நேரடியாக சென்று ‘நெஃப்ட்’ வசதி மூலம் ரொக்கமாக எந்த அடையாள ஆவணமும் இன்றி உள்நாட்டைச் சோ்ந்த பிறரின் வங்கி கணக்குக்கு ரூ.50 ஆயிரம் வரை அனுப்பலாம் என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பணப்பரிமாற்றம் தொடா்பான விதிகளை ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்டது. அதில்,புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் வங்கிகளுக்கு நேரில் சென்று நெஃப்ட் மூலம் ரூ. 50 ஆயிரம் வரை அனுப்பலாம் என்றும், பணப்பரிவா்த்தனை முகவா்கள் மற்றும் ஏடிஎம்கள் மூலமாக பிற வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு ஒரு பரிவா்த்தனையில் ரூ. 5 ஆயிரமும், மாதத்துக்கு ரூ.25 ஆயிரமும் அனுப்பலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள், வங்கிக் கணக்கு இல்லாத வாடிக்கையாளருக்கு தனது கணக்கில் இருந்து பணத்தை அனுப்பவும், அந்த பணத்தை ஏடிஎம் அல்லது பணப்பரிவா்த்தனை முகவா்கள் மூலம் வழங்கும் வசதியை அளிக்கலாம் என்றும் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

Advertisement

Advertisement

அதேநேரத்தில், இந்த வசதி மூலம் வாடிக்கையாளா் தனது கணக்கில் இருந்து வங்கி கணக்கு இல்லாத நபருக்கு ஒருமுறை அதிகபட்சம் ரூ.10 ஆயிரமும், மாதத்துக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே அனுப்பும் வகையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

இந்த வசதியில், ஒரு ஏடிஎம் அட்டை மூலம் மற்றொரு ஏடிஎம் அட்டைக்கு பணம் அனுப்பும் வசதிக்கு விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஒருவரின் வங்கிக் கணக்கிலோ அல்லது ஒரு குழுவின் வங்கிக் கணக்கிலோ சந்தேகப்படும் வகையில் பணம் வரவு வைக்கப்படும்பட்சத்தில் அதுகுறித்து உடனடியாக வங்கிகள் விசாரிக்க வேண்டும் என்றும் ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பு, புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.