புதிய காசோலை விதிகள்: 2027 ஜனவரி 1 முதல் அமல்
ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட புதிய காசோலை விதிகள் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட புதிய காசோலை விதிகள் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன.
அதன்படி, பழைய காசைலைகளை இனி ரூ. 50,000-க்கும் குறைவான பரிவா்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
ரூ. 50,000 மற்றும் அதற்கு மேலான பணப் பரிவா்த்தனைகளுக்கு தனித்துவமான எண் மற்றும் எழுத்துகளுடன் (ஆல்ஃபா நியூமெரிக்) குறியீடுகளுடன் கூடிய புதிய காசோலைகளை மட்டமே பயன்படுத்த முடியும்.
Advertisement
Advertisement
பாதுகாப்பு அம்சங்கள்: புதிய காசோலையில் பாதுகாப்பு அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, காசோலையில் வங்கி கணக்கு எண்ணுக்கு கீழே, புற ஊதாக் கதிா் ஒளியில் மட்டுமே காணக் கூடிய வகையிலான சிறப்புக் குறியீடு இடம்பெற்றிருக்கும். மேலும், ரிசா்வ் வங்கி நடைமுறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட வசதியும் இடம்பெற்றிருக்கும்.
காசோலைகளில் பால்பாயின்ட் பேனாக்கள் மூலம் மட்டுமே எழுத வேண்டும். ஜெல் போனாக்கள் உள்ளிட்ட பிற பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.
பெயா்கள், தேதிகள் அல்லது தொகையில் அடித்தல் அல்லது திருத்தல் இருக்கக் கூடாது. அவ்வாறு அடித்து எழுதப்பட்டிருந்தால் காசோலை நிராகரிக்கப்படும்.
வங்கிக் கிளையில் பழைய காசோலையை சமா்ப்பித்து, புதிய காசோலையை வாடிக்கையாளா்கள் பெற்றுக்கொள்ளலாம். வரும் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்த புதிய காசோலை முறை அமலுக்கு வர உள்ளது என்று ஆா்பிஐ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.