FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொல்கத்தா விமான நிலையத்தில் தெரு நாய்! திசைத்திருப்பப்பட்ட சென்னை விமானம்!

கொல்கத்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தெருநாய் சுற்றித்திரிந்ததால் சென்னையில் இருந்து சென்ற விமானம் திசைத்திருப்பப்பட்டது குறித்து...

இண்டிகோ - ANI
பகிர்:

கொல்கத்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் தெரு நாய் ஒன்று சுற்றித்திரிந்ததால் சென்னையில் இருந்து சென்ற விமானம் மற்றொரு விமான நிலையத்துக்குத் திசைத்திருப்பப்பட்டது.

கொல்கத்தாவில் இருந்து ஜார்க்கண்டின் ராஞ்சிக்குச் செல்லும் இண்டிகோ விமானம் ஒன்று இன்று (நவ. 12) புறப்படத் தயாராகி ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது, திடீரென விமான ஓடுபாதையில் தெரு நாய் ஒன்று சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

ஓடுபாதையில் நாய் திரிவதைக் க் கண்ட அந்த விமானத்தின் விமானி உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்துள்ளார். இதேவேளையில், சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற மற்றொரு இண்டிகோ விமானம் அந்த ஓடுபாதையில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, உடனடியாகச் சென்னையில் இருந்து சென்ற விமானத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டு அந்த விமானம் 187 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு புர்துவான் மாவட்டத்தின் ஆண்டல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால், மிகப் பெரிய விபத்துத் தவிர்க்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீவிர கண்காணிப்பில் இயங்கும் விமான ஓடுபாதையில் தெரு நாய் ஒன்று சுற்றித்திரிந்தது கொல்கத்தா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A flight from Chennai was diverted to another airport after a stray dog ​​was found wandering on the runway at Kolkata Airport.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.