FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! குகி இன பெண் பலி!

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு பற்றி..

துப்பாக்கிச் சூடு
பகிர்:

மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குகி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தபௌ குகி கிராமத்திற்கு அருகிலும், அண்டை மாவட்டமான சேனாபதியின் கைலெங்ஜாங் பகுதிக்கு அருகிலும், இரு தீவிரவாதக் குழுக்களுக்கு இடையே இன்று காலை 11 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த மோதலின் போது, ​​அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்த தபௌ குகி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் நெங்போய் சோங்லோய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தபோது, ​​அவரது கையில் அறுவடைக்குப் பயன்படுத்தும் அரிவாள் இருந்தது. அவரது உடலை உள்ளூர் மக்களும் பாதுகாப்புப் படையினரும் மீட்டனர்.

துப்பாக்கிச் சூட்டின்போது காயமடைந்த நபர் ஒருவர், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தபௌ குகி கிராமத்தைச் சேர்ந்த குகி-சோ இனத்தைச் சேர்ந்த இரு பொதுமக்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, காங்போக்பியைச் சேர்ந்த பழங்குடியினர் ஒற்றுமைக்கான குழு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவிற்கு அரசு திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை என்று கூறி மாவட்டத் தலைமையகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தபௌ குகி கிராமத்தை, தற்போதுள்ள சேனாபதி மாவட்டக் காவல் நிலையத்தின் அதிகார வரம்பிலிருந்து நீக்கி, காங்போக்பி மாவட்டக் காவல்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.