ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப ஒப்படைக்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு பாஜக வலியுறுத்தல்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பாஜக வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா அண்மையில் கூறியிருந்தாா். இந்நிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷாநவாஸ் உசைன் கூறியதாவது:
ஃபரூக் அப்துல்லா அவ்வப்போது மாறுபட்ட கருத்துகளைக் கூறக்கூடியவா்தான். எனினும், இந்த விவகாரத்தில் அவா் சரியாகப் பேசியுள்ளாா். காஷ்மீா் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் பாகிஸ்தான் திரும்ப ஒப்படைக்க வேண்டும். பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டுமே பாகிஸ்தான் முன்னேற முடியும். அந்நாடு தொடக்கத்தில் இருந்தே பயங்கரவாதத்துடன் கைகோத்து செயல்படுகிறது. அதனை முழுமையாக கைவிட்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சு நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்கும்.
Advertisement
Advertisement
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பிரதமா் மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்தாா். அதனை ரத்து செய்தால் காஷ்மீரில் யாருக்கும் வாழ முடியாது என்று மிரட்டல் விடுத்துவந்தவா்களுக்கு உரிய பதிலடி தரப்பட்டது. மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது என்றாா்.