FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...

14 நவம்பர் 2026, 9:46 pm
பிரதமர் மோடி.
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓமனில் சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டு மழை குவித்து வருகின்றன.

Advertisement

Advertisement

அந்த வகையில் பிரதமர் மோடியும் இந்திய அணியை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளம் வீரர்களின் சாதனை குறித்து பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

"இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு சிறப்பான நாள்! இன்றைய ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்டு ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையை வென்ற நமது இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களின் இந்த வெற்றி பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

summary

Prime Minister Narendra Modi on Saturday congratulated the Indian cricket team for winning the Under-19 Asia Cup in Oman, saying their impressive performance would inspire several youngsters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.