FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்துக்கு ஹாரி பாட்டரின் புத்தகம் வெளியான முதல் வாரத்தில் கிடைத்த வரவேற்பைப் போன்று உள்ளது...

பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ் புத்தகத்தை பார்வையிடும் வாசகர் - பிடிஐ
பகிர்:

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்துக்கு ஹாரி பாட்டரின் புத்தகம் வெளியான முதல் வாரத்தில் கிடைத்த வரவேற்பைப் போன்று உள்ளதாக புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தக விற்பனை நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் புத்தகங்களை மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் அடுத்தடுத்த வாரங்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கடந்த 10 ஆம் தேதி வெளியிட்டார்.

இந்தப் புத்தகத்தில், அவரது இளமைப்பருவம், காதல், தனிப்பட்ட வாழ்க்கை, உடல் நலம், ராஜீவ் காந்தி, குழந்தைகள், இந்திரா காந்தி, அரசியல் வாழ்வு என பல விவகாரங்களை வெளியிட்டுள்ளார்.

புத்தகம் வெளியான அடுத்தடுத்த நாள்களில் பலர் சோனியா காந்தியின் வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கியமான விஷயங்கள் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் எழுந்தன.

பாஜகவினர் பலர் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பல சம்பவங்களைக் குறிப்பிட்டு சோனியா காந்திக்கு எதிராகவும் காங்கிரஸுக்கு எதிராகவும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.

வரலாற்று நிகழ்வுகளையும் இப்புத்தகத்தோடு தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதால், அரசியல் விமர்சகர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் இப்புத்தகத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் அடுத்தடுத்த நாள்களில் மேலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக புத்தக நிலைய விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தில்லியில் புத்தக விற்பனையாளர் ஒருவர் பேசியதாவது:

''வாசகர்களிடையே சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் வெளியான முதல் வாரத்தில் கிடைத்த வரவேற்பைப் போன்று இது இருக்கிறது. அடுத்த வாரத்தில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

summary

Sonia Gandhi's memoir 'Belonging: A Journey of Love similar excitement during release of Harry Potter book

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.