புணேவில் அஜீத் பவார் சிலை திறப்பு! அமித் ஷா புகழாரம்!
மகாராஷ்டிர அரசியலில் அஜீத் பவாரின் இடத்தை நிரப்ப முடியாது. அமித் ஷா உருக்கம்...
அஜீத் பவாரின் மறைவு மகாராஷ்டிரத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
புணேவில் உள்ள ஜில்லா பரிஷத் அலுவலக வளாகத்தில் அஜீத் பவாரின் மார்பளவுச் சிலையை அமித் ஷா திறந்துவைத்துப் பேசினார்.
Advertisement
Advertisement
அஜித் பவாரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அடுத்த பல ஆண்டுகளுக்கு யாராலும் நிரப்ப முடியாது.
என்சிபி தலைவர் மகாயுதி கூட்டணியில் இணைந்தது. மாநிலத்தில் ஆளும் கூட்டணியை நிலைப்படுத்த உதவியது.
அஜித் பவாரின் பணிகள் மற்றும் பங்களிப்புகளிலிருந்து வருங்காலத் தலைமுறையினர் கற்றுக்கொள்ள இந்தச் சிலை ஊக்கமளிக்கும், இது அவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகமாக இருக்கும்.
என்சிபி தலைவர் அஜீத் பவார், இந்த ஆண்டு ஜனவரி 28 அன்று புணே மாவட்டத்தின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி சுனேத்ரா பவார் என்சிபி தலைவராகவும், மகாயுதி அரசாங்கத்தில் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
மகாராஷ்டிரத்தில் இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த மகா விகாஸ் அகாதி அரசை வழிநடத்திய உத்தவ் தாக்கரேயைக் குறிப்பிட்ட அமித் ஷா, கரோனோ பெருந்தொற்று காலத்தில் அப்போதைய முதல்வருடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், அஜீத் பவார் மாநிலச் செயலகத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடர்கொள்ளும் வகையில் இருந்தார். அரசின் நிவாரணப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை அவர் உறுதி செய்தார்.
அரசியல் பேச்சுவார்த்தைகளின்போது அஜீத் பவார் மிகவும் தெளிவாகவும், நேர்மையாகவும் செயல்படுவதைக் கண்டுள்ளேன். அஜித் பவார் தொலைநோக்குப் பார்வை கொண்ட நேர்மையான மற்றும் துணிச்சலான தலைவர், மக்களுடன் எப்போதும் நெருக்கமாக இருந்தவர். கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரை அஜித் பவார் ஒரு களஞ்சியம், நிர்வாகச் சிக்கல்கள் குறித்த அழமான அறிவு அவருக்கு இருந்தது.
அஜித் பவாரின் உயிரிழப்புக்குக் காரணமான விமான விபத்து குறித்த விசாரணையை விரைவுபடுத்தவும், அதன் இறுதி அறிக்கையை வெளியிடவும் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, மகாராஷ்டிர மாநில குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விமான விபத்து விசாரணை பணியகம் ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.