அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாது: அமித் ஷா
நாட்டில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என அமித் ஷா பேசியது குறித்து...
நாட்டில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவ. 15) தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரை துணை முதல்வர் சுனேத்ரா பவார் விமான நிலையத்தில் வரவேற்றார்.
Advertisement
Advertisement
புணேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது:
''சர்வதேச மேடைகளில் இந்தியாவைப் பழித்துரைப்பதன் மூலம் ராகுல் காந்தி அதிகாரத்திற்கு வர முடியாது. அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, கிராமங்களுக்குச் செல்ல வேண்டும்.
இது தொடர்ந்தால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் அதிகாரத்திற்கு வர முடியாது'' எனக் குறிப்பிட்டார்.