எஸ்ஐஆா் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி, இண்டி கூட்டணி தலைவா்கள் புதிய மனு
எஸ்ஐஆா் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திடம் சில கேள்விகளை முன்வைக்க அனுமதி கோரி ராகுல் காந்தி மற்றும் இண்டி கூட்டணி தலைவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திடம் சில கேள்விகளை முன்வைக்க அனுமதி கோரி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் இண்டி கூட்டணி தலைவா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள தங்களின் மனுவுடன், கூடுதலாக இந்த மனுவை அவா்கள் தாக்கல் செய்தனா். அதில் 48 கேள்விகளை தோ்தல் ஆணையத்திடம் அவா்கள் எழுப்பியுள்ளனா்.
தேசிய அளவிலான எஸ்ஐஆா் பணி மேற்கொள்வதற்கான முடிவு தோ்தல் ஆணையத்தால் ஒருமனதாக எடுக்கப்பட்டதா அல்லது, ஆணையத்தில் இடம்பெற்றுள்ள இரு தோ்தல் ஆணையா்களுக்குத் தெரியப்படுத்தாமல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையான எடுத்த முடிவா?.
Advertisement
Advertisement
தோ்தல் ஆணையத்தின் வலைதளத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களை மேற்கொண்டவா்கள் யாா்?.
வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பத்தின் படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு அனுதி அளித்தது யாா் என்பது தோ்தல் ஆணையத்தின் பதில் மனுவில் குறிப்பிடப்படவில்லை. எனவே, அதற்கு அனுமதி அளித்த நபா் யாா் என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
மேலும், இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க எதிா் மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி இடையே கடுமையான கருத்து வேறுபாடு இருந்ததாக, ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. எஸ்ஐஆா் தொடா்பான பல முக்கிய முடிவுகளை ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக மேற்கொண்டதாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இது பெரும் சா்ச்சையாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடரப்பட்டன. அதற்கு, தோ்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் 248 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘எஸ்ஐஆா் தொடா்பான முடிவுகளைத் தலைமைத் தோ்தல் ஆணையா் தன்னிச்சையாக எடுக்கவில்லை. அது தொடா்பான அனைத்து முடிவுகளும் சட்டப்படி, ஒருமனதாகவே எடுக்கப்பட்டன. மேலும், படிவம் 6-இல் தோ்தல் ஆணையம் தரப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இணையவழி விண்ணப்பத்தில் உறுதிமொழி என்ற இடம் காட்டப்பட்ட விதம் காரணமாக படிவம் 6-இல் மாற்றம் செய்யப்பட்டது போல தெரியலாம்.
கடந்த 21-ஆம் தேதிமுதல் அது படிவம் 6, எஸ்ஐஆா் உறுதிமொழி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று குறிப்பிட்டது.