FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டுள்ளது குறித்து...

6 வினாடிகள் முன்பு
விழா நடைபெறும் அரங்கில் முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - எக்ஸ்
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

தில்லியில் நடைபெற்றுவரும் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுடன் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

summary

Sonia Gandhis book launch event! Chief Minister Vijay participates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.