இதுதான் கடும் நடவடிக்கையா? பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! மு.க. ஸ்டாலின்
பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் விஜய், தீபாவளி பரிசு கொடுத்தனுப்பியதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் விஜய், அவர்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தனுப்பியதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
'தவறு செய்தால் விடமாட்டேன் என முதல்வர் விஜய் தனது கட்சி எம்எல்ஏ-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என சேதத்தை கட்டுப்படுத்துவதற்காக (Damage Control) செய்தித்தாள்களில் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
முதல்வரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'கண்டிப்பான அதிகாரி (Strict officer) செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! ரியல் ஆக்ஷன் எடுத்து, தான் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்பதை முதல்வர் நிரூபித்துக் காட்ட காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!" என்று பதிவிட்டுள்ளார்.