முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு! மதிய விருந்து?
முதல்வர் விஜய்யுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு...
முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். அங்கு ராகுலுக்கு மதிய விருந்து அளிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.
தில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் வரவேற்றனர்.
Advertisement
Advertisement
அங்கிருந்து ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் சார்பில் மதிய விருந்து அளிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தில்லி திரும்புகிறார்.
LoP Rahul gandhi meets CM vijay in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.